Slide SERTAI KAMI SUMBANGAN SERTAI KAMI SUMBANGAN

Berita Gerakan

எம்பிக்கள் எஸ்ஓபி விதிமுறைகளை மீறலாமா?

Ogo 3, 2021

கோலாலம்பூர் ஆகஸ்ட் 3
மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டிய எம்பிக்கள் எஸ்ஓபி விதிமுறைகளை மீறலாமா என கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கேள்வி எழுப்பினார்.

அதேவேளையில் பாக்காத்தான் ஹராப்பான் எம்பிக்கள் பொதுமக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி உங்களை பதில் தோல்வியடைந்த இந்த எம்பிக்கள், டத்தாரான் மெர்டேக்காவில் பேரணியாக கூடியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர்.

கோவிட் 19 தொற்று மோசமடைந்து வரும் இந்த காலகட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க இந்த எம்பிக்கள் தவறிவிட்டனர்.

இந்த சமூக இடைவெளி கடை பிடிக்காததால் புதிய கோவிட் 19 திரள் உருவெடுக்கும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த எம்பிக்களில் பெரும்பாலோர் தடுப்பூசிகள் எழுதிக் கொண்ட போதிலும், இவர்கள் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என நினைவுறுத்தினார்.

எதிர் கட்சி எம்பிக்கள் அரசாங்கத்திற்கு எதிராக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்த இது நேரம் அல்ல என டோமினிக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று பாக்காத்தான் ஹராப்பான் எம்பிக்கள் டத்தாரான் மெர்டேக்காவில் பேரணியாக கூடினர்.

Kerajaan perlu asingkan sisa klinikal

Kerajaan perlu asingkan sisa klinikal

KUALA LUMPUR – Kerajaan digesa supaya mempertimbangkan pengasingan sisa klinikal di semua lokasi pusat pembuangan sampah seperti tempat pengasingan bahan kitar semula untuk mengelakkan lambakan bahan-bahan klinikal di tempat-tempat awam. Presiden Parti Gerakan Rakyat...

baca lagi