Berita Gerakan

கோவிட் 19 தொற்று அதிகரிப்பிற்கு அரசாங்கத்தை ஏன் குறை கூற வேண்டும்?

Ogo 2, 2021

கோலாலம்பூர் ஆக 2
நாட்டில் தினசரி கோவிட் 19 தொற்று அதிகரிப்பிற்கு அரசாங்கத்தை குறை கூற வேண்டாம் என கெராக்கான் உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் நினைவுறுத்தினார்.

இந்த தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் விதித்துள்ள எஸ்ஒபி நிபந்தனைகளை மக்கள் தவறாமல் பின்பற்றினால் மட்டுமே முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.

தினசரி தொற்று அதிகரிப்பிற்கு அரசாங்கம்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் சாடி வருவது அடிப்படையற்ற ஒன்று என்றார் அவர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த கொடிய தொற்றை எதிர்கொண்டு வருகின்றோம்.

இlந்த தொற்றை ஒழிக்கவும் கட்டுப்படுத்தவும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன் களப்பணியாளர்கள் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளால் மட்டுமே இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியாது.
எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இணைந்து தோள் கொடுக்க வேண்டும்.

இது ஒரு கொடூர தொற்றாகும். இதை கட்டுப்படுத்தவும் காலப்போக்கில் முற்றாக ஒழிக்கவும் அனைவரின் பங்கு மிக அவசியம் என்றார் அவர்.
இதை விடுத்து எதிர்கட்சிகள் அரசாங்கத்திற்கு நெருக்குதல் தருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை எதிர்கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்த தொற்று அதிகரிப்பிற்கு பிரதமர் தான் காரணம் என இவர்கள் கூறிவருவது அறிவிற்கு எட்டாத ஒன்று என அவர் சொன்னார்.

அதேவேளையில் இந்த தொற்றை கட்டுபடுத்து அனைவரும் தடுப்பூசிகளை எழுதிக்கொள்வது மிக மிக அவசியம் என டத்தோ பரமேஸ்வரன் தெரிவித்தார்.