Slide SERTAI KAMI SUMBANGAN SERTAI KAMI SUMBANGAN

Berita Gerakan

நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான வழிமுறை தேவை

Sep 1, 2021

கோலாலம்பூர் செ 1
கோவிட் 19 தாக்கத்தை கையாள்வதில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான வழிமுறையை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் தேசிய தின செய்தியில் கூறினார்.

இந்த கொடூர தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளதால் பொருளாதாரத்தை மீட்சி நிலைக்குக் கொண்டுவர அரசாங்கத்தின் திட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வளர வேண்டும் என்றார் அவர்.

பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் சில வியூக திட்டங்களை அரசாங்கம் வகுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நாட்டில் 62.6 விழுக்காடு இளைய சமூகத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி திட்டம் மேலும் துரிதப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான புதிய அரசாங்கம் கோவிட் 19 தொற்றை ஒழிப்பதில் வெற்றி காண வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கெராக்கான் தலைமையக கட்டிடத்தில் உள்ள வாவாசான் மண்டபத்தில் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது நேற்று 100 பேருக்கு செனொவெக் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Hina Jata Negara: GERAKAN syor henti terbitan buku

Hina Jata Negara: GERAKAN syor henti terbitan buku

KUALA LUMPUR, 30 Jun -- Parti Gerakan Rakyat Malaysia (GERAKAN) mencadangkan agar penerbitan buku yang didakwa menghina Jata Negara, dihentikan pengeluarannya atau ditukar kulit yang baharu, demi menghormati kesucian lambang rasmi kedaulatan negara. Presiden...

baca lagi