Berita Gerakan

நம்மை மட்டுமின்றி நாட்டை காப்பாற்றுவோம் தடுப்பூசி அவசியம்

Ogo 6, 2021

கோலாலம்பூர் ஆக 6
கோவிட் 19 தொற்றின் லிருந்து நம்மை மட்டுமின்றி நாட்டை காப்பாற்றுவோம் தடுப்பூசி மிக அவசியம் என கெராக்கான் உதவித் தொகை பல்ஜிட் சிங் வலியுறுத்தினார்.

இந்த கொடிய தொட்டிலில் இருந்து விடுபட தற்போது அதிகமான மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தினசரி அதிகரித்துவரும் இந்த தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் சிறந்த வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார் அவர்.

நாட்டில் இந்த தொற்று அதிகரிப்பிற்கு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை குறை கூறி வரும் தரப்பினரை அவர் சாடினார்.
இது ஒரு கொடிய தொற்றாகும்.

தடுப்பூசி மற்றும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்ஓபி விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கொடிய தொற்றை ஒழித்தால் மட்டுமே நாம் வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்ப முடியும். இதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்பதை நாம் உணர வேண்டும்.

அதேவேளையில் இந்த தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் போராட்டத்திற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என பல்ஜிட் வலியுறுத்தினார்.