Slide SERTAI KAMI SUMBANGAN SERTAI KAMI SUMBANGAN

Berita Gerakan

மக்களுக்கு உதவுவதில் கவனத்தை செலுத்துங்கள்

Ogo 18, 2021

கோலாலம்பூர் ஆக 17
கோவிட் 19 தாக்கத்தால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உதவுவதில் இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என கெராக்கான் தேசிய துணைத் தலைவர் ஓ தோங் கியோங் கூறினார்.

பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து இந்நாட்டு மக்களில் பெரும்பாலும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் பாரிட் புந்தார்,பாகான் செராய், லாருட் மற்றும் பாடாங் ரெங்காஸ் கெராக்கான் தொகுதி பேராளர்கள் மாநாட்டை ஆன்லைன் மூலம் தொடக்கி வைத்து அவர் பேசினார்.

தற்போது நாட்டு மக்கள் மிக சவால்மிக்க எதிர்காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அரசியல்வாதிகள் கண்டறிய வேண்டும்.

அரசியல்வாதிகள் அரசியல் பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனுடையே கோவிட் 19 தாக்கம் முடிவடைந்ததும் நடைபெறவிருக்கும் 15வது பொதுத்தேர்தலை சந்திக்க கெராக்கான் தயார் என அவர் குறிப்பிட்டார்.

Kerajaan perlu asingkan sisa klinikal

Kerajaan perlu asingkan sisa klinikal

KUALA LUMPUR – Kerajaan digesa supaya mempertimbangkan pengasingan sisa klinikal di semua lokasi pusat pembuangan sampah seperti tempat pengasingan bahan kitar semula untuk mengelakkan lambakan bahan-bahan klinikal di tempat-tempat awam. Presiden Parti Gerakan Rakyat...

baca lagi