Berita Gerakan

வசதி குறைந்த குடும்பங்களுக்கு கெராக்கான் தலைவர் பொருளுதவி

Ogo 28, 2021

கோலாலம்பூர் ஆக 28
இங்கு ஜாலான் ஈப்போ தாமான் வாயூவில் உள்ள பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 40 குடும்பங்களுக்கு கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார்.
கெராக்கான் உதவிக்கரம் திட்டத்தின் கீழ் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக டத்தோ டோமினிக் குறிப்பிட்டார்.

பொது முடக்கத்தால் குறிப்பாக பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கோவிட் 19 தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பிபிஆர் குடியிருப்பு மக்களுக்கு தமது கட்சி தொடர்ந்து உதவிகளை வழங்கிவருவதாக அவர் சொன்னார்.
பிபிஆர் குடியிருப்பு மக்களுக்கு அரசாங்கமும் போதுமான உதவிகளை வழங்க வேண்டும் என்றார் அவர்.
அதேவேளையில் அந்தந்த பகுதிகளிலுள்ள தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளும் இந்த வசதி குறைந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்றார் அவர்.