Berita Gerakan

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

Sep 14, 2021

ஜோர்ஜ்டவுன் செப் 14-பினாங்கில் கோவிட் 19 தொற்றின் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பினாங்கு கெராக்கான் தலைவர் ஓ தோங் கியோங் கூறினார்.

மாநிலத்தில் தனிமைப்படுத்தும் மையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதற்கான காரணத்தை பினாங்கு அரசாங்கம் விளக்கம் தர வேண்டும் என்றார் அவர்.

பினாங்கில் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் 37.5 விழுக்காடு நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பினாங்கில் 8000 கோவில் 19 நோயாளிகள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.இந்த நோயாளிகள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்வதால் இந்த தொற்று சமூகத்தில் எளிதில் பரவும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் கோவிட் 19 நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையங்களில் அனுமதிக்கப்படுவது மாநில சுகாதார இலாகா  உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.அதே வேளையில் மாநிலத்தில் கோவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.