Berita Gerakan

அடுத்த மக்களவை கூட்டத்தில் எம்பிக்களின் செயல்பாடுகள் தெரியவரும்

Jun 19, 2021

கோலாலம்பூர் ஜூன் 19நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) தங்களின் சுயநலத்திற்காக அல்லது உண்மையிலே கோவிட் 19 தொற்றை ஒழிப்பதற்காக செயல்படுகிறார்களா என்பது குறித்து அடுத்த மக்களவை கூட்டத்தில் தெரியவரும் என கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கூறினார்.பொதுமக்கள் எம்பிக்களின் ஆற்றல்களை கண்காணிக்கவும் வரும் 15வது பொதுத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதையும் முடிவு செய்ய அடுத்த மக்களவை கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.கோவிட் 19 தொற்றை போராட அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என அவர் குறிப்பிட்டார்.தங்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்ள எம்பிக்கள் மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்டால் அது அனைவரின் நேரத்தை விரையமாக்கும் நோக்கமே என அவர் தெரிவித்தார்.நேற்று இங்கு கட்சியின் தலைமையகத்தில் மத்திய செயலவை கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.வரும் பொதுத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை மக்கள் முடிவு செய்ய அடுத்து மக்களவை கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும் என அவர் சொன்னார்.இதனிடையே அடுத்த நாடாளுமன்ற கூட்டம் எப்பொழுது நடைபெறும் என்பதை பிரதமர் தான் முடிவு செய்வார் என அவர் குறிப்பிட்டார்.