Berita Gerakan

ஆதரவை மீட்டுக் கொள்வதுகொள்வது பொருத்தமான நடவடிக்கை அல்ல

Ogo 5, 2021

கோலாலம்பூர் ஆக 5
தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்வது ஒரு பொருத்தமான செயல் அல்ல என கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கூறினார்.

கோவிட் 19 தாக்கத்தால் நாடு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் பேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களை காப்பாற்றுவதில் மட்டும்தான் அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த காலகட்டத்தில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக அம்னோ செய்துள்ள முடிவு நியாயமாக தெரியவில்லை என்றார் அவர்.

தற்போதைக்கு கோவிட் 19 தொற்றை எதிர்த்துப் போராடுவதில் நடப்பு அரசாங்கத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோள் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் கோவிட் 19 தொற்று ஒரு முடிவுக்கு வந்த பிறகு அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் பலத்தை காட்டலாம் என டத்தோ டோமினிக் ஆலோசனை கூறினார்.

பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் அம்னோ உச்ச மன்றம் அறிவித்தது.