Berita Gerakan

பிரதமர் முஹிடின் அரசாங்கத்திற்கு கெராக்கான் முழு ஆதரவு

Ogo 4, 2021

கோலாலம்பூர் ஆக 4
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கூறினார்.

சில அம்னோ எம்பிக்கள் பெரிக்காத்தான் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டுள்ள போதிலும், பெரிக்காத்தானுடனான கெராக்கானின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றார் அவர்.

ஆகையால் நாட்டில் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் போராட்டத்திற்கு என்றுமே துணை நிற்கும் என்றார் அவர்.
தற்போதைய நாட்டின் நெருக்கடியான காலகட்டத்தில் நடப்பு அரசாங்கத்திற்கு இடையூறை ஏற்படுத்த குறிப்பிட்ட சில தரப்பினர் பல தந்திரங்களை கடைபிடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எத்தனை நெருக்கடி வந்தாலும் அதனை சமாளிக்கும் ஆற்றல் தமக்கு இருக்கிறது என்பதை பிரதமர் நிரூபித்து காட்டியுள்ளார்.
அரண்மனை மாண்பை காக்கவும் நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு இல்லை என்பதை தமது செயல்களின் வழி முஹிடின் நிரூபித்து விட்டதாக டோமினிக் சுட்டிக் காட்டினார்.