Berita Gerakan

மக்களுக்கு உதவிட நேரத்தை செலவு செய்யுங்கள்

Ogo 3, 2021

ஜோர்ஜ்டவுன் ஆக 3
அனைத்து எம்பிக்களும் இந்த நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உதவிட நேரத்தை செலவிட வேண்டும் என பினாங்கு கெராக்கான் தலைவர் ஓ தோங் கியோங கூறினார்.

இதை விடுத்து பேரணி நடத்தி அரசாங்கத்தை குறை கூறி வருவதால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்றார் அவர்.
பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட அனைத்து எம்பிக்களுக்கும் மத்திய அரசாங்கம் கட்சிப் பாகுபாடின்றி தலா 3 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த பணத்தை ஏழை மக்களுக்கு முழுமையாக பயன்படுத்துவதில் மட்டுமே அனைத்து எம்பிக்களும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தங்களுடைய அரசியல் அபிலாசைகளை தீர்த்துக்கொள்வதை விட கோவிட் 19 தாக்கத்தால் அன்றாட வாழ்வாதாரத்திற்கு தவித்து வரும் மக்களை காப்பாற்ற என்ன வழி என்பதை எம்பிக்கள் கண்டறிய வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்ந்து நேற்று டத்தாரான் மெர்டேக்காவில் எதிர் கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர்.