Berita Gerakan

வசதி குறைந்த குடும்பங்களுக்கு கெராக்கான் உதவிக்கரம்

Jul 3, 2021

கோலாலம்பூர் ஜூலை 3
கோவிட் 19 தாக்கத்தால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் குடும்பங்களுக்கு கெராக்கான் உதவி வருவதாக அக்கட்சியின் உதவி தலைவர் டத்தோ பரமேஸ்வரன் கூறினார்.

சிலாங்கூர் முதல் கட்டமாக அம்பாங்,செலாயாங் மற்றும் பத்துகேவ்ஸ் வட்டாரத்தை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருளுதவி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் தொடக்கிவைத்த”பரிவு காட்டும் திட்டத்தின்”தில் நாடு தழுவிய நிலையில் இந்த உதவி ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

தலைநகரில் உள்ள வங்சா மாஜூ வட்டாரத்தில் கெராக்கான் துணை சபாநாயகர் பிரபாகரன் இதுபோன்ற உதவிகளை செய்துவருவதாக அவர் சொன்னார்.

பினாங்கு, பத்து காவானில் தம்மை பிரதிநிதித்து 16 ஏழை குடும்பங்களுக்கு சிவசுந்தரம் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொது முடக்கத்தால் சிரமத்தை எதிர்நோக்கி வரும் குடும்பங்களுக்கு கெராக்கான் இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்துவரும் என அவர் சொன்னார்.

இதனிடையே உலு சிலாங்கூரில் அந்த தொகுதியின் உதவித் தலைவர் ராமராவ் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவி வருவதாக அவர் சொன்னார்.