Berita Gerakan

புதிய தொற்றுக்கு எதிராக விழிப்புநிலை தேவை

Sep 15, 2021

கோலாலம்பூர் செப் 15
எம்யு எனப்படும் புதிய கோவிட் 19 தொற்றுக்கு எதிராக அரசாங்கம் விழிப்புடன் இருக்கவேண்டுமென கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் எச்சரித்தார்.

இந்த புதிய வீரியம் கொண்ட தொற்று நாட்டிற்குள் பரவுவதற்கு எதிராக அரசாங்கம் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த எம்யு தொற்று நாட்டில் பரவினால் கோவிட் 19 தொற்றை ஒழிக்க அரசாங்கத்தின் முயற்சிகள் சீரழிந்து போகும் என்றார் அவர்.

எம்யு மற்றும் லம்டா தொற்று லாபுவானில் உருவெடுத்துள்ளதாக அண்மையில் ஊடக செய்திகள் வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தின் படி ஹாங்காங்,தென் கொரியா, ஜப்பான் உட்பட 46 நாடுகளில் இந்த வீரியம் கொண்ட தொற்று பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இந்த அபாய தொற்று நாட்டிற்குள் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என டோமினிக் கோரிக்கை விடுத்தார்.